தலையாலங்காடு
தலையாலங்காடு: தலையாலங்காடு எனும் கிராமம் " 53.சிமிழி ஊராட்சி "யில் அமைந்துள்ளது. தெய்வப்பொன்னி நதியின் தென்கரையில் உள்ள தேவாரப் பாடல்பெற்ற சிவத்தலங்களுள் 93 வது தலமாக விளங்கும் திருத்தலையாலங்காடு நர்த்தனபுரீஸ்வரர் கோயில் இங்குள்ளது. இது வரலாற்றுச் சிறப்பும், புராணச் சிறப்பும் மிக்க தலமாக விளங்குகிறது. அமைவிடம்: இருப்புப் பாதை வழியில் செல்வோர் திருவாரூரில் இறங்கி, கும்பகோணம் செல்லும் பேருந்து மார்க்கத்தில் 14 கி.மீ. பயணித்தால், தலையாலங்காட்டை அடையலாம். சோழ சூடாமணி ஆற்றின் வடகரையில் 5 நிமிட நடைதொலைவில் ஆலயம் அமைந்துள்ளது. தமிழகத்தின் தென் மாவட்டங்களில் இருந்து தொடருந்தில் வருபவர்கள், கும்பகோணத்தில் இறங்கி,...