Posts

Showing posts from July, 2016

தலையாலங்காடு

தலையாலங்காடு:                          தலையாலங்காடு எனும் கிராமம் " 53.சிமிழி ஊராட்சி "யில் அமைந்துள்ளது.                                       தெய்வப்பொன்னி நதியின் தென்கரையில் உள்ள தேவாரப் பாடல்பெற்ற சிவத்தலங்களுள் 93 வது தலமாக விளங்கும் திருத்தலையாலங்காடு நர்த்தனபுரீஸ்வரர் கோயில் இங்குள்ளது. இது வரலாற்றுச் சிறப்பும், புராணச் சிறப்பும் மிக்க தலமாக விளங்குகிறது. அமைவிடம்:                                         இருப்புப் பாதை வழியில் செல்வோர் திருவாரூரில் இறங்கி, கும்பகோணம் செல்லும் பேருந்து மார்க்கத்தில் 14 கி.மீ. பயணித்தால், தலையாலங்காட்டை அடையலாம். சோழ சூடாமணி ஆற்றின் வடகரையில் 5 நிமிட நடைதொலைவில் ஆலயம் அமைந்துள்ளது. தமிழகத்தின் தென் மாவட்டங்களில் இருந்து தொடருந்தில் வருபவர்கள், கும்பகோணத்தில் இறங்கி, 25 கி.மீ. தூரம் திருவாரூர் செல்லும் பேருந்தில் பயணித்தால் இத் தலத்தை அடையலாம். தொன்மை:                        சங்க காலத்தில் இவ்வூர் " தலையாலங்கானம் " என்னும் பெயரில் விளங்கியது. (தலையாலங்கானப் போரும், தலையாலங்கானத்துச் செரு வென

சிமிழி

சிமிழி ஊராட்சி தமிழ்நாட்டின் திருவாரூர் மாவட்டத்தில் உள்ள குடவாசல்  வட்டாரத்தில் அமைந்துள்ளது. இந்த ஊராட்சி, நன்னிலம் சட்டமன்றத் தொகுதிக்கும் நாகப்பட்டினம் மக்களவைத் தொகுதிக்கும் உட்பட்டதாகும். இந்த ஊராட்சி, மொத்தம் 7 ஊராட்சி மன்றத் தொகுதிகளைக் கொண்டுள்ளது. இவற்றிலிருந்து 7 ஊராட்சி மன்ற உறுப்பினர்கள் தேர்ந்தெடுக்கப்படுகின்றனர்.  2011ஆம் ஆண்டு இந்திய மக்கள் தொகை கணக்கெடுப்பின்படி, மொத்த மக்கள் தொகை 2344 ஆகும். இவர்களில் பெண்கள் 1161 பேரும் ஆண்கள் 1183 பேரும் உள்ளனர். இவ்வூரின் வரலாற்று பெயர் "சேழுசிபுரம்" என்பதாகும். இவ்வூரின் நடுவே "சோழசூடாமணி" ஆறு பாய்கிறது. மற்ற இடுகைகள் :  பெரும்பண்ணையூர் சிமிழி காப்பணாமங்கலம் சேங்காலிபுரம் புதுக்குடி அன்னவாசல் பெருமங்கலம் மஞ்சக்குடி மூலங்குடி அரசவணங்காடு வடகண்டம் மணக்கால் காட்டூர் திருக்கண்ணமங்கை